Review found in JUNIOR VIKATAN dated 07.06.2009
நான் மனநோயாளியா ?
"நான் சந்திக்க இருந்த அபாயததை ஜூனியர் விகடன் தான் விசாரிச்சு எழுதி என் உயிருக்கு உததிரவாதம் கொடுத்திதுச்சு. ஆனா இப்போ மறுபடியும் என்னை சூழ்ந்து இருக்கிற அபாயம் ஒவ்வொரு நிமிஷமும் என்னை கொன்னுகிட்டு இருக்கு. கட்டிய மனைவியும் சொந்தங்களுமே என்னை கொல்ல திட்டம் போடுறாங்க்க யார்கிட்ட சொல்லி அழூறதுனு தெரியலை கண்ணீரோடு அந்த பெரியவர் பேசுகையில் நமக்கே இனம் புரியாத வலி
அவர் டேவிட், ஆவடியில் உள்ள நாசரெத மேநிலை பள்ளி மற்றும் அநக்ஸ் கல்வி நிறுவனங்க்களின் உரிமையாளர் 67 வயதான டேவிட் டை சிலர் கடத்தி வைத்து இருப்பதாக நமக்கு செய்தி கிடைத்தது அதை 29.04.09 ல் ஜு வி யில் மிஸ்டர் கழுகார் சொல்லி இருந்தார் இந்நிலையில் சமீபத்தில் நமது அலுவலகத்துக்கு வந்திருந்தார் டேவிட் "நான் எங்க ஸ்கூல் ஆரம்பிச்ப்போ 7 மாணவர்கள் தான் சேர்ந்தாங்க ஆனாலும் நான் மனம் தளறாம ஸ்கூலை தொடர்ந்து நடத்துக்கிட்டு இருந்தேன் அப்புறம் மெல்ல வளர்ந்து பி.எட் கல்லூரி கலை அறிவியல் கல்லூரின்னு பெரிய கல்வி நிறுவனமா வளர்ந்து நிற்கிறோம் ஏழு மாணவர்கள் படித்த ஸ்கூல் இப்போ எழதாயிரத்திற்க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கிறாங்க ஆனா இந்த நெகிழ்வை எல்லாம் நொருக்கி போடுற மாதிரி என் குடும்பமே எனக்கு எதிரா திரும்பிடிச்சு எனக்கும் என் மனைவி சந்திராவிக்கும் அடிக்கடி சண்டை வர ஆரம்பிடுசிடுச்சு என் மனைவிக்கு சப்போர்ட்டா உறவு வழியிலான ஜெபராஜ் என்பவர் தலையிட எங்க மோதல் முத்தி போச்சு நான் திருமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தேன் இதனால் கோபமான என் மனைவி அவளோட அக்கா மகளான விஜி க்ரேஸ் கூட சேர்ந்துக்கிட்டு என்னை மிரட்ட ஆரம்பிச்சா எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கிறதா சொல்லி டார்சர் செய்ய ஆரம்பிச்சா போன 02.04.09 தேதி இரவு 9 மணிக்கு இரண்டு மர்ம நபர்கள் வந்து என்னை பலவந்தமா தூக்கினாங்க என் கை கால் கண்ணையும் கட்டிணாங்க பிறகு எனக்கு மயக்க ஊசி போட்டு வேனில் தூக்கிட்டு போனாங்க விளாம்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் அரை குறை மயக்கத்தில் இருந்து என்னை சேர்த்து வம்படியாக ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்க எனக்கு பைத்தியம் பிடிக்கலை ன்னு எவ்வளவோ கேன்சினேன் ஆனா யாரும் கேக்கலை மன நிலை தவறியவர்க்கு கொடுக்கிற மருந்துகளை எனக்கு கொடுத்தாங்க"
"இதற்கிடையில் நான் கடததப்படதாக ஜு வி யில் செய்தி வெளியாகவே என்னை பரிசோதனை செய்த டாக்டர் கல் என் மன நிலை சரியாக இருப்பதாக சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைச்சாங்க 35 நாள் அந்த நரகத்தில் இருந்து ஜு வி தான் என்னை மீட்ட்டுச்சு ஆனாலும் என் மனைவி சந்திரா என்னை சரி வர கவனிக்க வில்லை என் மனைவியிடம் பேச முயற்சி செய்தேன் அது சாத்தியம் இல்லாம போச்சு" என்ற டேவிட் க்கு கண்கள் கலங்கின
"மன நோயாளிக்குரிய மருந்து மாத்திரை சாப்பிட்டதால் என் உடம்பு மோசம் ஆயிடிச்சு மனதளவிலும் ரொம்ப நொந்து போயிட்டேன் யாரும் என்னை ஏதும் செய்து விடுவார்களா என்ற அச்சம் என்னை தூங்க விடாமல் துன்புறூத்து கிறது குருவி கூட்டை போல் இருந்த குடும்பம் சிதறி போயிட்ச்சே ன்னு தவிக்கிறேன் வசதியும் புகழும் இல்லாம எத்தனையோ குடும்பங்கள் அல்லாடிகிட்டூ இருக்கும்போது எல்லாம் இருந்தும் எனக்கு நிம்மதி இல்லாம போன கொடுமயை யாருகிட்ட சொல்லி அழூறது ன்னு தெரியல்லை"
"என் வளர்ப்பு மகளான சோபியாவை கூப்பிட்டு என் நிலமைகளை சொல்லி வருத்ப்ட்டேண் என் சகோதரியான கீதாவை என் கூட வந்து தங்கியிருக்கும்படி கேட்கலமான்னு சோபியா கிட்ட ஆலோசனை கேட்டேன் கடைசியில் பார்த்த உங்களுக்கும் வீட்டுக்கும் சம்பந்தம் இல்லை இங்க யாருக்கும் இடம் இல்லைன்னு சோபியவும் சந்திரா வும் சேர்ந்து கிட்டு என்னை விரட்டிடாங்க ஒரே நாள்ல நடுவீதிக்கு வந்திட்ட நிலமை நான் மகனாக பாவித்து வளர்க்கும் வினோக்கர் ப்ரைட் என்பவர் வீட்டுக்கு போனேன் என் நிலமைய பார்த்து இப்போ அவர் தான் எல்லா விதங்க்களிலும் உதவியா இருக்கார்"
" என் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்கும்படி திருமங்கலம் போலீஸ் ஸ்டேஸனில் புகார் கொடுத்திருக்கிறேன் நான் கடததப்ட்டபோது காப்பாற்றிய ஜு வி தான் எனக்கு கடவுளாக தெரிகிறது பிரச்சனைகளில் இருந்து தப்ப முடியாம அல்லா டு கிற என் நிலமையை தயவு செய்து வெளிச்த்துக்கு கொண்டு வாங்க" நாம் இரு கைகளையும் பிடித்து கொண்டு அந்த பெரியவர் கலங்கினார் டேவிட் டின் வேதனைகள் குறித்து அவர் மனைவி சந்திரா டேவிட் உடன் பேசினோம்
" இது எங்கள் குடும்ப விவகாரம் அதனால் எதையும் வெளிச்சம் போட்டு பேச நாங்கள் தயார் இல்லை எங்கள் கல்வி நிறுவனத்திற்கு கேட்ட பெயர் உண்டாக்கும் நோக்கில் சிலர் திட்டமிட்டு பழி பரப்பி கொண்டு இருக்கின்றனர் அவர்கள் திட்டம் பலிக்காது என்று பதறாமல் சொன்னார் . சிலர் இந்த விவகாரத்தை பூதகாரப்படுத்தி கொண்டு இருக்கின்றனர் "என்றனர் சந்திராவும் அவர் தரப்பினாரும்
இந்த விவகாரம் குறித்து திருமங்கலம் காவல் நிலயத்தில் விசாரித்தபோது 23.03.09 அன்று டேவிட் எங்களிடம் புகார் கொடுத்தார் அதை விசாரித்து வெளியாட்கள் யாரும் குடும்ப விஷயத்தில் தலையிடகக்கூடாது என எச்சரித்தததோம் அதன் பிறகு சில நாட்கள் வரை எந்த வித சச்சரவும் இல்லாமல் இருந்தது ஆனால்சம்பந்தம் இல்லாத ஆட்கள் வந்து தலையிடுவதால் அந்த குடும்ப பிரச்சனை பெரிதாகி கொண்டே போகிறது இப்போது டேவிட் மறுபடியும் புகார் கொடுத்திருக்கிறார் இருந்தாலும் குடும்ப பிரச்சனையால் பல்லாயிரம் பேர் படிக்கும் கல்வி நிறுவனம் பாதிக்கப்பட்டு கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை நிதானமாக விசாரித்து கொண்டு இருக்கிறோம்கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுத்து டேவிட் க்கு எந்த வித பிரச்னை இல்லாத படி தீர்வு எடுத்து கொடுப்போம் என்று நிஜமான அக்கறையுடன் கூறினார்
டேவிட் நம் அலுவலகத்து க்கு ஒரு கடிதம் அனுப்ப பட்டிருக்கிறது அதில் " நான் தாங்கள் அலுவலகத்திற்கு மே மாதம் 2-வது வாரத்தில் புகார் கொண்டு வந்து கொடுத்திருந்தேன் தார் போது குடும்பத்தில் இருப்பவர்கள் கலந்து பேசி சுமுக முடிவு எடுத்திருக்கிறோம் நானும் என் மனைவியும் கசப்பு உணர்வை மறந்து பிரச்னைக்கு முற்று புள்ளி வைத்து உள்ளோம் " என்று தெரிவித்து இருக்கிறார் . ஒற்றுமையாய் இருந்தால் சரி தான். ந்ம் கவலை அந்த கல்வி நிலயத்தை நம்பி படிக்கும் மாணவர்களை பற்றி தான் !
-இரா. கண்ணன்
Posted by
lolly man ( i_rock_at@yahoo.co.in )